பிக்பாஸ் 7 எமோஷ்னல் புரொமோ

by Column Editor

பிக்பாஸ் 7

18 போட்டியாளர்கள், மக்களுக்கு பரீட்சயமான பலர், அறிமுகம் இல்லாதவர்கள் சிலர் என்று படு பிரம்மாண்டமாக அக்டோபர் 1ம் தேதி தொடங்கப்பட்ட நிகழ்ச்சி தான் பிக்பாஸ் 7.

கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்க ஒளிபரப்பாக தொடங்கிய இந்நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 80 நாட்களை கடந்து ஒளிபரப்பாகும் இந்நிகழ்ச்சியில் தற்போது Freeze Task நடக்கிறது.

இதில் போட்டியாளர்களின் உறவினர்கள் வீட்டிற்கு வந்த வண்ணம் உள்ளனர். வீட்டிற்குள் வந்த ரவீனாவின் சித்தி மற்றும் அவரது சகோதரர் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியே அனுப்பும்படியான விஷயத்தை செய்து பரபரப்பை ஏற்படுத்தினார்கள்.

விசித்ரா குடும்பம்

இன்னும் இதில் விசித்ராவின் வீட்டில் இருந்து மட்டும் யாரும் வராமல் இருந்தனர். இந்த நிலையில் விசித்ராவின் கணவரை நிகழ்ச்சியில் பார்த்ததும் எமோஷ்னல் ஆகிவிடுகிறார். பின் அவரது மகன்கள் வேறொரு வழியில் வந்து அவருக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளனர்.

தனது கணவரை பார்த்ததும் விசித்ரா அழுதுவிடுகிறார், இதோ அந்த புரொமோ,

Related Posts

Leave a Comment