கன்பெஷன் அறையில் கதறியழுத தாமரை: வில்லியாக மாறி வெளியான பிரியங்காவின் சுயரூபம்

by Column Editor

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வார தலைவர் பதவிக்கு அண்ணாச்சி, ராஜு, தாமரை, அபிநய், வருண், அக்ஷரா இவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களின் எதிர்பார்ப்பினை அதிகரித்து வரும் நிலையில், சில தினங்களுக்கு முன்ப அபிஷேக் வைல்டு கார்டு எண்ட்ரியாக உள்ளே சென்றுள்ளார்.

இதனால் இன்னும் நிகழ்ச்சி களைகட்டும் என்று எதிர்பார்ப்படும் நிலையில், நேற்றைய தினத்தில் அபிஷேக்கை கமல் மிக நன்றாகவே அசிங்கப்படுத்தினார்.

இந்நிலையில் இன்று தலைவர் பதவிக்கான நடைபெறும் போட்டியினை ப்ரொமோவாக பிரபல ரிவி வெளியிட்டுள்ளது. இதில் தாமரை மற்றும் பிரியங்காவின் மோதல் உச்சத்திற்கு நிற்கின்றது.

தற்போது வெளியான ப்ரொமோ காட்சியில் தாமரை கன்பெஷன் அறையில் கதறி அழுவது காட்டப்பட்டுள்ளது. நாமினேஷன் நடைபெற்றள்ள நிலையில், சிலர் தாமரையின் பெயரையும், சிலர் பிரியங்காவின் பெயரையும் கூறியுள்ளனர்.

இந்நிலையில் தாமரை இறுதியாக கன்பெஷன் அறையில் கதறியழுவது போன்று காட்டப்பட்டுள்ளது. தாமரையின் தற்போதைய விளையாட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகின்றது.

Related Posts

Leave a Comment