விஜய் நடிப்பில் வெளியான, ‘வாரிசு’ திரைப்படம்… தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது ..

by Lifestyle Editor

தமிழில் ஜனவரி 11 ஆம் தேதி வெளியான இப்படம் தெலுங்கில் ‘வாரசுடு’ என்கிற பெயரில் ரிலீஸ் சில நாட்கள் கழித்தே வெளியானது. காரணம், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர்களான, சிரஞ்சீவி மற்றும் பாலையா நடித்த படங்கள் வெளியானதால், தியேட்டர் பற்றாக்குறை காரணமாக இந்த மாற்றம் செய்யப்பட்டது. தெலுங்கிலும் இப்படம் ஃபேமிலி ஆடியன்ஸ் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இப்படம், அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது அனைவரும் அறிந்ததே. குறிப்பாக ஓடிடி-யில் வெளியான பின்னரும், சில திரையரங்குகளிலும் ஓடி வெற்றிகரமாக 50-வது நாளை கொண்டாடியது ‘வாரிசு’ திரைப்படம்.

இந்நிலையில், வெள்ளித்திரை, ஓடிடி-யை தொடர்ந்து… உங்கள் வீட்டு இல்லத்திரையிலும் ‘வாரிசு’ ஒளிபரப்பாக உள்ளது. இது குறித்த அறிவிப்பை தற்போது சன் டிவி வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழ் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14 ஆம் தேதி, மாலை 6:30 மணிக்கு வாரிசு திரைப்படம் ஒளிபரப்பாகும் என அறிவித்துள்ளது.

Related Posts

Leave a Comment