நடிகர் சிம்புவா இது, படப்பிடிப்பு எடுக்கப்பட்ட அவரது லேட்டஸ்ட் லுக்- செம ஸ்மார்ட்

by Column Editor

தமிழ் சினிமாவில் நடிகர்கள் தொடர்ந்து படங்கள் நடித்துவந்தால் தான் மார்க்கெட்டில் இருப்பார்கள் என்ற பேச்சு இருக்கிறது.

ஆனால் சிம்புவின் விஷயத்தில் அது அப்படியே எதிர்மறையாக தான் இருந்தது. சிம்பு இடையில் எந்த படங்களும் நடிக்காமல், படங்கள் எதுவும் கமிட்டாகாமல், உடல் எடை எல்லாம் போட்டு ஆளே மாறியிருந்தார்.

அந்த நேரத்திலும் அவரது ரசிகர்கள் பெரிய ஆதரவு கொடுத்து வந்தார்கள்.

பின் கொரோனா, லாக் டவுனை பயன்படுத்தி சிம்பு உடல் எடையை குறைத்து ஆளே மாறியிருந்தார், அந்த புகைப்படங்கள் பார்த்து ரசிகர்கள் வியந்தார்கள்.

அடுத்தடுத்து படங்கள் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார், தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு என்ற படத்தில் நடிக்கிறார், மும்பையில் படப்பிடிப்பு நடக்கிறது.

சிம்பு லேட்டஸ்ட்டாக ரசிகருடன் எடுத்த புகைப்படம் ஒன்று வெளியாக அதைப்பார்த்த ரசிகர்கள் சிம்பு செம ஸ்மாட் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

Related Posts

Leave a Comment