சிவகார்த்திகேயன் உடன் இணையும் வடிவேலு – ‘சிங்கப்பாதை’

by Column Editor

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாக இருக்கும் புதிய படம் குறித்த அப்டேட் கிடைத்துள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் ‘டான்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். பிரியங்கா அருள் மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். சூரி, சமுத்திரக்கனி, காளி வெங்கட், முனிஸ்காந்த், சிவாங்கி, பால சரவணன் உள்ளிட்டோரும் படத்தில் நடித்துள்ளனர். படப்பிடிப்பு முடிந்து தற்போது படத்தின் இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்தப் படத்தை அடுத்து சிவகார்த்திகேயன் அட்லீயிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த அசோக் என்பவர் இயக்கத்தில் நடிக்க உள்ளதாகக் கூறப்பட்டு வருகிறது. அந்தப் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். படத்திற்கு சிங்கப் பாதை என்று தலைப்பு வைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.அந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் அப்பா, மகன் என இரட்டை வேடங்களில் நடிக்க இருப்பதாகவும் என்றும் கூறப்படுகிறது.

படம் குறித்த தற்போதைய அப்டேட் என்னவென்றால், வைகைப்புயல் வடிவேலு அந்தப் படத்தில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் பிரபல மலையாள நடிகர் இந்தப் படத்தில் வில்லனாக நடிக்க பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் துவங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Related Posts

Leave a Comment