கேரளாவில் மாஸ்டர் வசூலை பின்னுக்குத் தள்ளிய வலிமை!

by Column Editor

ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியாகியது.

நடிகர் அஜித்தின் வலிமை திரைப்படம் நடிகர் விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தின் முதல் நாள் வசூலை கேரளாவில் முறியடித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

‘நேர்கொண்ட பார்வை’ படத்தைத் தொடர்ந்து நடிகர் அஜித் ‘வலிமை’ படத்தில் நடித்தார். அவரின் 60-வது படமாக உருவாகிய இதனையும் இயக்குநர் எச்.வினோத் இயக்கியுள்ளார். வலிமை படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடிக்க, யோகிபாபு நகைச்சுவை கதாபாத்திரத்திலும், தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாகவும் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியாகியது. 2 ஆண்டுகளுக்கும் மேல் காத்துக் கிடந்த அஜித் ரசிகர்களுக்கு வலிமை திரைப்படம் கொண்டாட்டத்தைக் கொடுத்தது.

இந்நிலையில் வலிமை திரைப்படம் முதல் நாளில் கேரளாவில் ரூ. 6.09 லட்சம் வரை பாக்ஸ் ஆபிஸ் வசூல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் அதிக ரசிகர்களைக் கொண்ட விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் முதல் நாளில் அங்கு ரூ.3.65 லட்சம் வசூல் செய்திருந்தது. தற்போது அந்த சாதனையை வலிமை முறியடித்திருப்பதால் உற்சாகத்தில் இருக்கிறார்கள் ரசிகர்கள்.

Related Posts

Leave a Comment