டி20 கேப்டன் பதவியை விராட் கோலி ராஜினாமா செய்ய தோனி காரணமா?

by Column Editor

டி20 உலகக்கோப்பை தொடரில் விராட் கோலியை கடுப்பேற்ற பிசிசிஐ செய்த சம்பவம் ஒன்று தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரில் இருந்து இந்திய அணி லீக் சுற்றுடன் வெளியேறி ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தது. இந்த தொடருக்காக சுமார் 4 வருடங்களுக்குப் பின் அஸ்வினும், கடந்தாண்டு ஓய்வை அறிவித்த முன்னாள் கேப்டன் தோனி ஆலோசகராகவும் சேர்க்கப்பட்டனர்.

இருவரும் மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டுக்கு திரும்பியது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியளித்தது. ஆனால் இது கேப்டன் விராட் கோலியை கடுப்பேற்ற நடைபெற்ற திட்டமிட்ட சம்பவம் என தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஜூன் மாதம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு அஸ்வின் 2வது இன்னிங்ஸில் சிம்ம சொப்பனமாக விளங்கினார். ஆனால் நியூசிலாந்து கோப்பையை கைப்பற்றி அசத்தியது. இதனைத் தொடர்ந்து நடந்த இங்கிலாந்துடனான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் 3 போட்டிகளிலும் சேர்க்கப்படாதது ரசிகர்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

4வது டெஸ்டில் அவர் சேர்க்கப்பட வேண்டிய கட்டாயம் இருந்தும் புறக்கணிக்கப்பட்டார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் தோற்றப் பிறகு பிசிசிஐ, வீரர்களிடம் தனித்தனியாக விளக்கம் கேட்டது. அப்போது ரவிச்சந்திரன் அஸ்வின், கேப்டன் கோலி குறித்து விமர்சனங்களை கூறியதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டபோது, 4 வருடங்கள் இந்திய டி20 அணிக்கு ஆடாத அஸ்வின் பெயரும் அதில் சேர்க்கப்பட்டிருந்தது. இதன்மூலம், கோலிக்கும், அஸ்வினும் எந்த பிரச்சினை இல்லை என அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. ஆனால் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் பேட்டி கோலி மீதான விமர்சனங்களை உண்மையாக்கியுள்ளது.

தனியார் பத்திரிகை ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியின் போது ஹர்திக் பாண்டியா போன்ற பிட்னஸ் இல்லாதவர்களுக்கு ஏன் அணியில் இடம் கொடுத்தீர்கள் என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ரவி சாஸ்திரி 15 பேர் கொண்ட அணியை தேர்வு செய்தபோது, அந்த குழுவில் நான் இடம்பெறவில்லை. கேப்டன் விராட் கோலியும் அணித் தேர்வின்போது அருகில் இருக்கவில்லை என தெரிவித்தார். ஆனால் ஆடும் லெவன் அணி தேர்வின்போது நான் அருகில் இருந்தேன். அந்த அணித் தேர்வுக்கு நான்தான் பொறுப்பு என கூறினார்.

இந்த இரண்டு விஷயங்களால் கோலி மீது பிசிசிஐ அதிருப்தியில் இருந்துள்ளது. மேலும் அஸ்வினுக்கு துணையாக இருக்க விரும்பியதாலும் தான், அவர் டி20 உலகக் கோப்பை அணியில் பிசிசிஐயால் சேர்க்கப்பட்டிருக்கிறார். கோலியின் தன்னிச்சை போக்கிற்கு கடிவாளம் போடத்தான் அணியின் ஆலோசகராக மகேந்திரசிங் தோனி நியமிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த இரண்டு விஷயங்களால் வெறுப்படைந்ததால்தான் கோலி, அடுத்த சில தினங்களில் இந்திய அணி டி20 அணிக் கேப்டன் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார் என கிரிக்கெட் வட்டார தகவல்கள் கூறுகின்றன.

Related Posts

Leave a Comment