அடுத்த ஆண்டு துவங்குகிறது அஜித்தின் அடுத்த படம்… படப்பிடிப்பு குறித்து முக்கிய அப்டேட்

by Column Editor

அஜித்தின் 61வது படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்ற முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

அஜித்தின் மாஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘வலிமை’. எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அடுத்த ஆண்டு பொங்கலையொட்டி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள ,இந்த படத்தை காண ரசிகர்கள் ஆர்முடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். யுவனின் இசையில் வெளியான முதல் பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த படத்தை முழுவதுமாக முடித்துள்ள அஜித், அடுத்து எந்த இயக்குனருடன் கூட்டணி அமைப்பார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இதையடுத்து மூன்றாவது முறையாக மீண்டும் எச்.வினோத்துடனே அஜித் கூட்டணி அமைக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. அந்த தகவல் தற்போது உறுதியாகி முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த படத்தையும் போனி கபூர்தான் தயாரிக்கவுள்ளார்.

பெயரிடப்படாத இப்படத்தில் நடிகர் அஜித் நெகட்டிவ் கேரக்டரில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் முதற்கட்ட பணிகள் முடியவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜனவரி மாதம் துவங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதோடு வேதளாம் படத்திற்கு பிறகு அஜித்துடன். அனிரூத் இணைந்து பணியாற்றவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Posts

Leave a Comment