சைரன் படத்தின் முதல்நாள் பாக்ஸ் ஆபீஸ் கலெக்‌ஷன்..

by Lifestyle Editor

ஜெயம் ரவி இப்போது ஒன்றுக்கு மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார். இயக்குனர் எம் ராஜேஷ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் நித்யா மேனனோடு ஒரு படத்தில் நடிக்கிறார். இந்த படங்களுக்கு இடையில் ஜெயம் ரவி கீர்த்தி சுரேஷோடு சைரன் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்த படம் நேற்று உலகம் முழுவதும் ரிலீஸானது. இந்நிலையில் கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. சமீபகாலமாக ஜெயம் ரவியின் அகிலன் மற்றும் இறைவன் ஆகிய திரைப்படங்கள் மோசமான விமர்சனங்களையும் வசூலையும் பெற்றன.

இந்நிலையில் சைரன் இந்த படங்களை விட முதல் நாள் வசூலில் முந்தியுள்ளதாம். இந்த படம் தமிழகத்தில் 1.5 கோடி ரூபாய் அளவுக்கு வசூல் செய்துள்ளதாம். அடுத்தடுத்த நாட்களில் விமர்சனத்தைப் பொறுத்து வசூல் அதிகமாக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

Related Posts

Leave a Comment