கச்சத்தீவு அந்தோணியார் திருவிழாவை புறக்கணித்துள்ள மீனவர்கள் : இலங்கை அரசுக்கு எதிராக போராட்டம்

by Lifestyle Editor

இலங்கையில் தமிழக மீனவர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கச்சத்தீவு திருவிழாவை புறக்கணிக்க போவதாக மீனவர்கள் ஆலோசனை கூட்டத்தில் முடிவு எட்டப்பட்டுள்ளது.

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்ட மூன்று தமிழக மீனவர்களுக்கு சிறை தண்டனை விதித்து இலங்கை நீதிமன்ற தீர்ப்பளித்ததை கண்டித்தும்,நீதிமன்ற தீர்ப்பை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தியும் ராமேஸ்வரம் மீனவர்கள் கச்சத்தீவு திருவிழாவை புறக்கணிப்பதுடன் இன்று (17) முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக ஆலோசனை கூட்டத்தில் விசைப்படகு மீனவர்கள் முடிவு செய்து தீர்மானத்தை நிறைவேற்றி உள்ளனர்.

ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடந்த மூன்றாம் திகதி மீன்பிடிக்க சென்று நான்காம் திகதி அதிகாலை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இரண்டு படகுகளையும் அதிலிருந்து 23 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கைது செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர்.

மீனவர்களின் வழக்கு நேற்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட Nhபது வழக்கை விசாரித்த நீதிபதி 23 மீனவர்களில் 20 மீனவர்களை விடுதலை செய்து உத்தரவிட்டதுடன் இரண்டு மீன்பிடி விசைப் படைகு ஓட்டுநர்களான பெக்கர் மற்றும் ராபர்ட் ஆகிய இருவருக்கும் ஆறு மாத காலம் சிறந்த தண்டனை விதிக்கப்பட்டது.

அதேபோல் இலங்கை கடற்படையால் 2019 ஆண்ட சிறைபிடிக்கப்பட்டு இலங்கை நீதிமன்றத்தால் நிபந்தனைகளுடன் விடுதலை செய்யப்பட்ட மீனவர் மெல்வின் மீண்டும் எல்லை தாண்டிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதால் அவருக்கு ஓராண்டு சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.

இலங்கை நீதிமன்ற நீதிபதியின் தீர்ப்பு ராமேஸ்வரம் மீனவர்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இந்த தீர்ப்பை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் எனவும், சிறை தண்டனை விதிக்கப்பட்ட ராபர்ட், பெக்கர், மெல்வின் ஆகிய மூன்று மீனவர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி இன்று ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் அனைத்து விசைப்படகு மீனவ சங்கம் சார்பில் அவசர ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.

இந்த கூட்டத்தில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட மூன்று மீனவர்களின் குடும்பத்தினர் கலந்து கொண்டு கண்ணீருடன் தங்களது சிறையில் உள்ள தங்கள் உறவினர்களை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

பின்னர் கூட்டத்தின் முடிவில் எதிர்வரும்; 23,24 ஆகிய திகதிகளில் கச்சத்தீவில் நடைபெற உள்ள புனித அந்தோணியார் கோவில் திருவிழாவில் கலந்து கொள்ளாமல் தமிழக மீனவர்கள் புறக்கணிக்கப் போவதாகவும், விசைப்படகு மீனவர்கள் இன்று முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

அத்தோடு, நாளை மீன்பிடி விசைப் படகுகளில் கருப்பு கொடியேற்றி தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்த போவதாகவும் ராமேஸ்வரத்தில் இருந்து எதிர்வரும் செவ்வாய்க்கிழமை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மூன்று நாட்கள் நடந்து சென்று விசைப்படகு மீனவர்கள் அனைவரும் தங்களது படகு உரிமம், மீனவர் அடையாள அட்டை உள்ளிட்டவைகளை ஆட்சியரிடம் ஒப்படைக்க போவதாக மீனவர் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்துள்ளனர்.

மேலும் தங்களது கண்டனத்தை பதிவு செய்யும் விதமாக ராமேஸ்வரம் மீன்பிடி அனுமதி சீட்டு வழங்கும் அலுவலகம் முன்பு மீனவர்கள் சிறையில் உள்ள மீனவர்களின் குடும்பத்துடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் இலங்கை அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Comment