. முகத்தை அடிக்கடி கழுவினால் சருமம் பாதிக்கப்படுமா..

by Lifestyle Editor

கோடை காலம் வர போகிறது. தற்போது பகலில் வெயிலும், இரவில் குளிரும் வாட்டிவதைக்கிறது. அத்தகைய சூழ்நிலையில், சருமத்திற்கு சிறப்பு கவனிப்பு தேவை. சூரிய ஒளி, வெப்பம், வியர்வை போன்றவை சருமத்தில் பல பிரச்சனைகளை உண்டாக்கும். இதனால் பலர் அடிக்கடி முகத்தை கழுவுகின்றனர்..

சிலருக்கு ஒரு நாளைக்கு பல முறை முகத்தை கழுவும் பழக்கம் இருக்கும்.. குறிப்பாக கோடையில் அடிக்கடி முகம் கழுவுவது வெப்பத்தில் இருந்து நிவாரணம் தருவதாக பலர் கருதுகின்றனர். முகம் கழுவினால் முகம் பளபளக்கும். ஆனால், அவ்வாறு செய்வது சில சமயங்களில் சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும். எனவே, ஒரு நாளைக்கு எத்தனை முறை முகத்தை கழுவ வேண்டும் என்று பார்ப்போம்.

ஒரு நாளைக்கு எத்தனை முறை உங்கள் முகத்தை கழுவ வேண்டும்?

காலையில் எழுந்ததும் முதலில் முகத்தைக் கழுவுங்கள். இது சோம்பலை நீக்குவது மட்டுமின்றி உங்கள் உடல் உடனடியாக புத்துணர்ச்சி பெறும். காலையில் முகத்தை கழுவினால் சருமத்துளைகள் சுத்தமாகும். இருப்பினும், உங்கள் முகத்தை லேசான ஃபேஸ் வாஷ் மூலம் சாதாரண நீரில் கழுவ வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

உங்கள் சருமம் எண்ணெய் பசையாக இருந்தால், மதியம் ஒரு முறை முகத்தைக் கழுவலாம். எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி சோப்பு அல்லது ஃபேஸ் வாஷ் பயன்படுத்த வேண்டும். காலையில் முகத்தைக் கழுவிய பிறகு, மதியம் எண்ணெய் பசை சருமம் உள்ளவர்களின் முகத்தில் எண்ணெய் தேங்குகிறது. எனவே, அத்தகையவர்கள் மதியம் கூட குளிர்ந்த நீர் அல்லது ஃபேஸ் வாஷ் மூலம் முகத்தை கழுவலாம்.

அதுபோல், வேலை முடிந்து வீடு திரும்பியதும் முகத்தை நன்றாக கழுவ வேண்டும். இதனால் அன்றைய களைப்பு நீங்கும். முகத்தில் படிந்திருக்கும் அழுக்குகளும் நீங்கும். சிலர் கோடை மாலையிலும் குளிப்பார்கள். அப்படிச் செய்ய முடியாவிட்டால், ஒரு முறையாவது உங்கள் முகத்தை நன்றாகக் கழுவுங்கள்.

ஆனால், உங்கள் சருமத்தை ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்க, முடிந்தவரை தண்ணீர் குடிப்பதைப் பழக்கப்படுத்துங்கள். இது சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்கும். உங்கள் தினசரி உணவில் குறைந்தது ஒரு புதிய சாற்றையாவது சேர்த்துக்கொள்ளுங்கள். இவ்வாறு செய்வதால் உங்கள் சருமம் பளபளக்கும்.

வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஈ நிறைந்த உணவுகளை உங்கள் உணவில் சேர்க்க வேண்டும். உங்கள் உணவில் பழங்கள் மற்றும் காய்கறிகள் நிறைந்திருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். குறிப்பாக கேரட், வெள்ளரி, பப்பாளி, மாதுளை, கற்றாழை போன்றவற்றை எடுத்துக் கொண்டால் முகம் ஆரோக்கியமாக இருக்கும்.

Related Posts

Leave a Comment