40 வயதை கடந்தால் தாம்பத்ய உறவில் என்னெல்லாம் மாற்றங்கள் வரும்..

by Lifestyle Editor

ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் ஒரு பழமொழி உண்டு. இந்த பழமொழி தெரியாதவர்கள் யாரும் இருக்க வாய்ப்பில்லை. திருமணம் முடிந்து மூன்று மாதம் வரை உடலுறவில் ஆர்வம் காண்பிப்பதும், பின்னர் அதில் ஈடுபாடு சற்று குறைவதும் அனைவர்க்கும் வழக்கம்தான்.

ஆனால் நீண்ட நாட்கள் உறவு வைத்துக்கொள்ளாமல் இருப்பது, கருத்து வேறுபாடு சண்டை, வேறு எதாவது உடல் சார்ந்த பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் இருக்கலாம்…ஆனால் உறவுக்கொள்ள உடல் மற்றும் மனம் இரண்டும் மிகவும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.

திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பார்கள். மனைவி அமைவதெல்லாம் இறவன் கொடுத்த வரம் என்பதையும் கேட்டு இருப்பீர்கள்…இவை எல்லாம் சரிதான். ஆனாலும் கணவன் மனைவிக்குள் சுமூகமான செக்ஸ் உறவு இல்லையென்றால் இவை அனைத்தும் பாழாகிவிடும்.

திருமணமான புதிதில் உடல் மிகவும் வலிமையாக இருக்கும்..ஆனால் மனம் அதில் எவ்வளவு ஈடுபாடு உள்ளது என்பதை பொருத்து சிலரது எண்ணம் மாறுபடும்.

பின்னர் வயது ஆக ஆக, மனம் மிகவும் வசப்பட்டு இருக்கும்.. ஆனால் உறவு கொள்ளும் அளவுக்கு உடலில் வலிமை இருக்காது.

அவ்வாறு உங்கள் உடலில் மாற்றம் ஏற்படும் இந்த தருணத்தில் தாம்பத்ய வாழ்கையில் சில மாற்றங்கள் ஏற்படும். அவை என்னவென்று பார்க்கலாம்.

வயது கூடும் போது தனது துணையுடன் நல்ல ஒரு உணர்ச்சி பூர்வமான பிணைப்பு ஏற்படும். இது உங்கள் இருவருக்குள்ளும் உள்ள அன்பையும், பிணைப்பையும் மேலும் அதிகரிக்கும்.

வயது அதிகரிக்கும் போது தான் எந்த அளவிற்கு உடலுறவு தேவை என்பதை மனதளவில் புரிந்துக்கொண்டு அதற்கேற்றாற்போல் செயல்படுவார்கள்

எந்த அளவிற்கு உடல் ஒத்துழைக்கும் என்பதை புரிந்துக்கொண்டு தாம்பத்யத்தில் ஈடுபடுவார்கள்…மேலும் இருவருக்குள்ளும் இருக்கும் ஒரு புரிதல் மேலோங்கி இருக்கும் அவர்களின் தாம்பத்ய வாழ்க்கையும் சிறப்பாக அமையும்.

Related Posts

Leave a Comment