உடலுறவில் ஆர்வம் அதிகரிக்க முதல்ல ‘இத’ செய்ங்க.. சலிக்காது!

by Editor News

தற்போது உடலுறவு கொள்ளக்கூட முடியாத அளவிற்கு சோர்வாக உணரும் வாழ்க்கை வாழ்கிறோம். உறக்கமின்மை, அலுவலகம் மற்றும் வீட்டு வேலை என இப்படி ஓடி கொண்டே இருப்பதால் விரைவில் சோர்வடைகிறோம். ஆனால் இந்த சோர்வு உங்களை பாலியல் செயல்பாடுகளில் இருந்து விலக்கி வைக்கிறது என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள். ஆனால், நீங்கள் சோர்வாக இருந்தாலும் கூட உடலுறவை அனுபவிக்க சில வழிகள் உள்ளன. அவற்றை மற்றும் பின்பற்றினால் போதும். அவை..

மன மற்றும் உடல் நலம்:

மன அழுத்தம் இல்லாமல் இருப்பது, மகிழ்ச்சி மற்றும் சிறந்த தூக்கம் போன்றவை ஒரு நல்ல பாலியல் வாழ்க்கைக்கு வழிவகுக்கும். ஆய்வின்படி, மாதத்திற்கு இரண்டு முறையாவது வழக்கமான உடலுறவு கொள்வது மன மற்றும் உடல் நலனுக்கு நன்மை பயக்கும்.

ஓய்வெடுங்கள்:

நீங்கள் தினமும் சோர்வாக உணர்ந்தால், உடலுறவை அனுபவிக்க விரும்பினால், எடுத்த உடனே மட்டர் பண்ணாமல் கொஞ்சம் ஓய்வெடுங்கள். இதில் வெதுவெதுப்பான நீரில் குளிப்பது, யோகா செய்வது இதுபோன்றவை அடங்கும். உங்கள் மனம் அமைதியாக இருந்தால், செக்ஸில் ஈடுபட மகிழ்ச்சியாவீர்கள்.

துணையிடம் பேசுங்கள்:

ஆரோக்கியமான உறவில் தொடர்பு மிகவும் முக்கியமானது. உடலுறவில் ஈடுபடும் முன் உங்கள் துணையுடன் பேசுவது உங்கள் உறவை இன்னும் வலுப்படுத்தும். மேலும், இது சிறந்த உடலுறவுக்கு வழிவகுக்கும்.

ஊட்டச்சத்து அவசியம்:

நீங்கள் ஓய்வெடுத்த பிறகு நல்ல ஊட்டச்சத்து உணவை சாப்பிடுங்கள். மேலும் உங்களை நீரேற்றமாகவும் வைத்திருங்கள். காரணம், செக்ஸில் ஈடுபடும்போது இது உங்களுக்கு ஆற்றலை அளிக்கிறது.

முன்விளையாட்டு:

மெழுகுவர்த்திகள், இசை, ஒரு திரைப்படத்துடன் உங்கள் உடலுறவை ஆரம்பிக்கவும். இது வசதியான உடலுறவுக்கு உங்களைத் தூண்டுகிறது. மேலும், நறுமண எண்ணெய்கள் மற்றும் இசை உங்கள் உணர்வுகளை செயல்படுத்துகிறது.

சுய இன்பம்:

இது உங்களை உடலுறவில் ஈடுபட தூண்டுகிறது. சில சமயங்களில் உங்கள் துணை உடலுறவு கொள்ள விரும்பாமல் இல்லை என்றால், அவர்களை புரிந்து கொள்ளுங்கள். இது உங்கள் செக்ஸ் வாழ்க்கையை சீராக வைத்திருக்கும்.

Related Posts

Leave a Comment