உங்க உதடு கருப்பா இருக்குனு கவலை படாதீங்க… இதோ உங்களுக்கான டிப்ஸ் ..

by Lifestyle Editor

மோசமான பழக்கங்களால் சிலருக்கு உதடு கருமையாக தோற்றமளிக்கும். கருமையான உதடுகள் மரபியல், வாழ்க்கை முறை பழக்கவழக்கங்கள் மற்றும் சில மருத்துவ செயல்முறை உட்பட பல்வேறு காரணிகளால் ஏற்படலாம். இப்படி எந்த காரணமாக இருந்தாலும் சில செயல்முறை மூலம் உங்கள் உதட்டை சிவப்பாக மாற்றிவிடலாம்.

ஆண் மற்றும் பெண் என இருவருக்கும் முகத்தில் உள்ள கவர்ச்சியான பாகங்களில் ஒன்று உதடு. எனவே தான் உதடு ரோஸ் நிறத்தில் இருக்க வேண்டும் என விரும்புவார்கள். ஆனாலும் சில காரணங்களால் நமது உதடு கருமையாக காணப்படும். அப்படி நீங்களும் அவதிப்பட்டால், உங்களுக்காக சில உதவிக்குறிப்புகளை நாங்கள் உங்களுக்கு வழங்குகிறோம். அவை, உங்கள் உதட்டை சிவப்பாக்குவதுடன் மென்மையாகவும் ஆக்குகிறது.

இயல்பாகவே நமது தாத்தா பாட்டி காலத்தில் இருந்தே, அனைத்து விஷயங்களுக்கும் பொதுவாக பயன்படுத்தப்படுவது தேங்காய் எண்ணெய். இதை உதட்டிற்கு பயன்படுத்தி வந்தால் உதட்டின் கருமை நீங்கும் என உங்களுக்கு தெரியுமா?. தேங்காய் எண்ணெய் உதட்டை ஈரப்பதமாக்கும் தன்மையை கொண்டது. இதனால் உதடுகள் மென்மையாக இருப்பதோடு உதட்டில் உள்ள கருமையை போக்கவும் உதவுகிறது. எனவே, வறண்ட உதடுகளுக்கு தேங்காய் எண்ணெய்யை அப்ளே செய்து வரலாம்.

எலுமிச்சையுடன் தேன் :

அழகு குறிப்பை பொறுத்தவரை தேன் இல்லாத எந்த குறிப்பையும் பார்க்க முடியாது. தேன் அலர்ஜி எதிர்ப்பு சக்தியை கொண்டுள்ளது. எலுமிச்சை சருமத்தை பொலிவாக்கும் பண்புகளைக் கொண்டுள்ளது. எனவே, எலுமிச்சை சாற்று உடன் தேன் சேர்த்து உதடுகளில் அப்ளே செய்து வந்தால் உதடுகளில் உள்ள கருமை நீங்குவதோடு உதடுகளும் சிவப்பாக மாறும்.

சரும ஆரோக்கியத்துக்கு முக்கியப்பங்கு வகிக்கும் பொருட்களில் கற்றாழையும் ஒன்று. கற்றாழை ஜெல்லில் அலோயின் என்ற பொருள் காணப்படுகிறது. இது உதடுகளில் உள்ள கருமை நிறத்தை போக்கி உதட்டை மென்மையாக்குகிறது. எனவே, தினமும் 1-2 முறை கற்றாழை ஜெல்லை அப்ளே செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

வெள்ளரிக்காய் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. வெள்ளரிக்காய் சாறில் ஆன்டி ஆக்ஸிடன்கள் மற்றும் சிலிக்கா நிறைந்த கலவை உள்ளது. இவை, உதட்டில் உள்ள கருமையை மங்கச் செய்து உதட்டிற்கு சிவப்பழகை தருகிறது. எனவே, வெள்ளரிக்காய் துண்டுகளை உதட்டில் தடவி வரலாம்.

மஞ்சள் சரும ஆரோக்கியத்திற்கு சிறந்தது. இவை நல்ல நாசினியாகவும் உள்ளது. மஞ்சளில் குர்குமின் என்ற நிறமி காணப்படுகிறது. இது மெலனோஜெனீசிஸை என்ற மெலனின் உருவாக்கத்தை தடுக்க உதவுகிறது. இதுவும் உதட்டின் கருமையை தடுத்து உதட்டிற்கு சிவப்பழகை தருகிறது.

நல்லெண்ணெய் எனப்படும் எள் எண்ணெய் சீசமோல் என்ற அமிலத்தை கொண்டுள்ளது. இதுவும் மெலனின் உருவாக்கத்தை தடுப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உதடுகளை மென்மையாகவும் சிவப்பாகவும் வைக்க இந்த எள் எண்ணெய் உதவுகிறது.

மாதுளை நிறைய ஆரோக்கிய பண்புகளை கொண்டுள்ளது. மாதுளை ஜூஸில் உள்ள ரோசினேஸ் செயல்பாடு மெலனின் உற்பத்தியை குறைக்கிறது. இந்த மாதுளை ஜூஸை உதட்டில் அப்ளே செய்து வந்தால் உதடுகளில் உள்ள கருமை நிறம் மறைந்து உதடுகள் சிவப்பாக மாறும்.

கேரட் சாற்றில் லைக்கோபீன் என்ற பொருள் காணப்படுகிறது. இதுவும் உதட்டிற்கு நல்ல சிகப்பு நிறத்தை தரவும் உதடுகள் மென்மையாக இருக்கவும் உதவுகிறது. அது மட்டுமல்ல இது உங்கள் சருமத்தை ஆரோக்கியமாக வைக்கவும் உதவுகிறது. கண் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.

ரோஜா இதழ்கள் பொதுவாக உதட்டுக்கான அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பில் பயன்படுகிறது. இதுவும் உங்கள் உதட்டிற்கு நல்ல சிகப்பு நிறத்தை கொடுக்கும். இதனுடன் தேன் கலந்து பயன்படுத்துவது உதட்டிற்கு ஈரப்பதத்தை அளிக்கிறது. அது மட்டுமல்ல, இது கூந்தல் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கிறது.

Related Posts

Leave a Comment