புதிய சட்டமூலங்களை சான்றுரைப்படுத்திய சபாநாயகர்

by Lankan Editor

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று (13) நிறைவேற்றப்பட்ட 2024ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தில் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தன தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார்.

இதேவேளை கடந்த 11ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பெறுமதி சேர் வரி (திருத்தச்) சட்டமூலம் மற்றும் நிதிச் சட்டமூலம் என்பவற்றையும் சபாநாயகர் நேற்று(13) சான்றுரைப்படுத்தினார்.

நேற்று முதல் நடைமுறைக்கு
இதற்கமைய, இந்தச் சட்டமூலங்கள் 2023ஆம் ஆண்டின் 32ஆம் இலக்க சேர்பெறுமதி வரி (திருத்த) சட்டமாகவும், 2023ஆம் ஆண்டின் 33ஆம் இலக்க நிதிச் சட்டமூலமாகவும், 2023ஆம் ஆண்டின் 34ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டமாகவும் நேற்று முதல் நடைமுறைக்கு வருகின்றன.

இந்நிலையில் சிறிலங்கா அரசாங்கத்தின் 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மீதான வாக்கெடுப்பு 41 மேலதிக வாக்குகளால் நேற்று  நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Comment