நாமினேஷனில் தொடரும் போட்டியாளர்கள் யார் ? .. அறிவித்த பிக்பாஸ்

by Column Editor

பிக்பாஸ் வீட்டில் இந்த வார நாமினேஷன் யார் என்பதை பிக்பாஸ் அறிவிக்கும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. 75வது நாளை தொட்டுள்ள இந்த நிகழ்ச்சி ரொம்பவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. டைட்டில் வின்னராக ‌ போட்டியாளர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். இதனால் நிகழ்ச்சி சுவாரஸ்யம் நிறைந்ததாக இருக்கிறது.

இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கு புதிய டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டு முயற்சி கடுமையாக்கப்பட்டு வருகிறது. நேற்றைய தினம் கொடுக்கப்பட்ட பல டாஸ்குகளில் சில போட்டியாளர்கள் வெற்றிப்பெற்றனர்.‌ அதே நேரம் இந்த டாஸ்க்கில் வெற்றி பெற்றவர்கள் நாமினேஷனில் இருந்து தப்பிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்றைய தினத்தின் இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் இந்த வார நாமினேஷன் தொடரும் நபர்கள் யார் என்பதை பிக் பாஸ் இன்று அறிவித்துள்ளார். அதன்படி அபினய், பிரியங்கா, பாவனி, அக்ஷரா, வருண், ராஜூ ஆகியோர் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. வழக்கம்போல் நாம எல்லாரும் இருக்கிறோம் என்பதை போல் ராஜூ, அக்ஷரா, பிரியங்கா ஆகியோர் சிரிக்கும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

Related Posts

Leave a Comment