நெல்லையில் பள்ளி கட்டடம் இடிந்து , 3 மாணவர்கள் உயிரிழப்பு !

by Column Editor

நெல்லையில் பள்ளி கட்டடம் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை பொருட்காட்சி திடல் அருகே உள்ள சாஃப்டர் மேல்நிலைப்பள்ளியில் கழிவறை சுவர் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது . இதில்8 ம் வகுப்பு மற்றும் 9ம் வகுப்பு படிக்கும் சஞ்சய், விஷ்வ ரங்சன் ஆகிய 3 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன் மூன்று மாணவர்கள் இந்த விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்துள்ளனர். இதுகுறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் விரைந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர் .

அத்துடன் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த மாணவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் பள்ளி கட்டடங்களை ஆய்வு செய்து பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என பெற்றோர்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.

Related Posts

Leave a Comment