ராஜூவை கட்டிப்பிடித்து அழும் சஞ்சீவ்.. கண்கலங்க வைக்கும் ப்ரோமோ !

by Column Editor

இன்றைய தினத்தின் முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் நாமினேஷில் இருந்த போட்டியாளர்கள் தங்களை காப்பாற்றிக் கொள்ள கடைசி வாய்ப்பை இன்று பிக்பாஸ் கொடுக்கிறார். நாமினேஷில் உள்ள பிரியங்கா, அமீர், சஞ்சீவ், ராஜூ, நிரூப் உள்ளிட்ட 8 நபர்களும் ஜோடியாக பிரிந்து விளையாட வேண்டும். யாரை காப்பாற்றவேண்டுமோ அவரின் புகைப்படத்தை காட்டவேண்டும். ஜோடியாக உள்ள இருவரும் ஒரே புகைப்படத்தை காட்டவேண்டும் என்று அறிவிக்கப்படுகிறது.

இந்த டாஸ்க்கின்படி கார்டன் ஏரியாவில் இரண்டு சிறிய அறை அமைக்கப்பட்டுள்ளது. இந்த அறைக்குள் முதல் ஜோடியாக பிரியங்கா மற்றும் அபினய்யும், இரண்டாவது ஜோடியாக வருண் மற்றும் அக்ஷராவும், மூன்றாவது ஜோடியாக பாவனி மற்றும் அமீரும், கடைசியாக ராஜூ மற்றும் சஞ்சீவ்வும் பங்கேற்கின்றனர்.

அப்போது பேசும் சஞ்சீவ், என் குடும்பம் வரும் வரையாவது இந்த பிக்பாஸ் வீட்டில் இருக்கவேண்டும் என்கிறார். இதைத்தொடர்ந்து பேசும் ராஜூ, எல்லாரும் சொல்லும்போது பிக்பாஸ் ஒரு முறை பார்க்கவேண்டும் சஞ்சீவ்வின் குழந்தை கேட்டிருக்கிறாங்க என்று கூறுகிறார். இதனால் சஞ்சீவ்வும் ராஜூவும் ஒரே மாதிரியாக சஞ்சீவ்வின் புகைப்படத்தை காட்டுகின்றனர். டாஸ்க் முடிந்த வெளியே வரும்போது ராஜூவை கட்டுப்பிடித்து அழும் காட்சிகள் ப்ரோமோவில் இடம்பெற்றுள்ளது.

Related Posts

Leave a Comment