அடேங்கப்பா.. டைட்டிலே மிரட்டுதே! இணையத்தை தெறிக்கவிடும் அதர்வாவின் புதிய பட கிளிம்ப்ஸ் வீடியோ!!

by Column Editor

தமிழ் சினிமாவில் சில திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை பெருமளவில் கவர்ந்து, பிரபல இளம் கதாநாயகர்களில் ஒருவராக வலம் வருபவர் அதர்வா. இவர் பிரபல முன்னணி நடிகர் முரளியின் மகன் ஆவார். அதர்வா நடிப்பில் உருவாகியுள்ள குருதி ஆட்டம், தள்ளிப்போகாதே போன்ற திரைப்படங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து அதர்வா டார்லிங், எனக்கு இன்னொரு பெயர் இருக்கு, 100, கூர்க்கா போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் சாம் ஆண்டன் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கிறார். இப்படத்தில் கதாநாயகியாக தான்யா ரவிச்சந்திரன் நடிக்கிறார். மேலும் அவர்களுடன் இப்படத்தில் அருண்பாண்டியன், கிருஷ்ணா, சீதா, முனிஷ்காந்த், அறந்தாங்கி நிஷா, சின்னி ஜெயந்த் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

பிரமோத் பிலிம்ஸும், மிராகிள் மூவிஸும் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளன. மேலும் ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இப படத்தின் வசனத்தை இரும்புத்திரை, ஹீரோ படங்களின் இயக்குனர் பி.எஸ்.மித்ரன் எழுதியுள்ளார். இந்த நிலையில் ஆக்ஷன் கலந்த படமாக உருவாகும் இதற்கு ட்ரிக்கர் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும் இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் கிளிம்ப்ஸ் வீடியோவையும் படக்குழு வெளியிட்டுள்ளது.

Related Posts

Leave a Comment