232
சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக வளர்ந்து வருகின்றார். அதிலும் சமீபத்தில் வந்த டாக்டர் படம் ஒட்டு மொத்த சினிமா ரசிகர்களையும் சந்தோஷத்தில் ஆழ்த்தியது.
இந்நிலையில் சிவகார்த்திகேயன் தற்போது டான் படத்தில் நடித்து வந்தார், இந்த படமும் முடிவடைந்து அடுத்து ஒரு டபுள் ஆக்ஷன் படம் ஒன்றில் நடிக்கவுள்ளார்.
இந்த டான் படத்திற்காக சிவகார்த்திகேயன் மிக கடுமையாக உடல் எடையை குறைத்துள்ளாராம்.
என்ன என்று விசாரித்தால், இதில் கல்லூரி மாணவனாக சிவகார்த்திகேயன் நடிக்கின்றார்.
அதோடு படத்தில் ஒரு சில பள்ளி பருவ காட்சிகளும் உள்ளதாம், அதற்காக தான் சிவகார்த்திகேயன் மிக கடுமையாக உடல் எடையை குறைத்துள்ளாராம்.
அந்த காட்சிகள் எடுத்து முடிக்க, தற்போது மீண்டும் உடல் எடையை கூட்டும் முயற்சியில் இருந்து வருகின்றார் சிவகார்த்திகேயன்.