284
இன்று பிறந்தநாள் கொண்டாடும் கமல்ஹாசன் ரசிகர்களிடம் பரிசை கேட்டார். உடனே அந்த பரிசை கொடுக்க ரசிகர்கள் கிளம்பியுள்ளனர். உலக நாயகன் கமல்ஹாசன் இன்று தன் பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
அவருக்கு ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், மாநில முதல்வர்கள் என்று ஏராளமானோர் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், கமல் ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில், மநீம உறவுகளே, மழை வெள்ளத்தால் தவிக்கும் ஏழை எளிய மக்களுக்கு வேண்டிய உதவிகளை விரைந்து செய்யுங்கள்; அதுதான் நீங்கள் எனக்குத் தரும் சிறந்த பிறந்தநாள் பரிசாக இருக்க முடியும் என்று பதிவிட்டார். சென்னையில் வெள்ளம் ஏற்பட்டு மக்கள் அவதிப்படுகிறார்கள். இந்நிலையில், கமலின் ட்வீட்டை பார்த்த அவரது ரசிகர்களோ, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ கிளம்பிவிட்டனர்.