கமலின் பிறந்தநாள்.. பாட்டு பாடி வாழ்த்து சொன்ன போட்டியாளர்கள் !

by Editor News

கமல் பிறந்தநாளையொட்டி பிக்பாஸ் போட்டியாளர்கள் பாட்டு பாடி வாழ்த்து சொன்ன ப்ரோமோ வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 35வது நாளை எட்டியுள்ளதால் தற்போது விறுவிறுப்பாக சென்றுக்கொண்டிருக்கிறது. பிக்பாஸ் வீட்டை சுவாரஸ்சியமாக்க புதிய டாஸ்க்குகுள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டாஸ்க்கில் விளையாடும் போட்டியாளர்களிடையே பெரிய சண்டை ஏற்படுகிறது. இதையடுத்து நேற்று சனிக்கிழமை என்பதால் பிரச்சனைக்குரிய போட்டியாளர்களை அழைத்து கமல் பேசினார். அப்போது கமல் முன்னிலையிலேயே தாமரைச்செல்வியும், பாவனியும் அடித்துக்கொண்டனர். இதனால் டென்ஷனாக கமல், இருவரையும் அமைதியாக இருக்கும்படி சொன்னதால் நேற்றைய தினம் பரபரப்பு ஏற்பட்டது.

இப்படி பிக்பாஸ் வீடே போர்களமாய் இருக்கையில் இன்று கமலின் பிறந்தநாள் என்பதால் போட்டியாளர்கள், அவருக்கு பாட்டு பாடி வாழ்த்து தெரிவித்தனர். அதன்படி, முதல் ப்ரோமோவில், பிறந்தநாள் வாழ்த்துக்கள் கமல் சார் என்று போட்டியாளர்கள் அனைவரும் ஒன்றாக சொல்கின்றனர். இதைத்தொடர்ந்து பேசும் பிரியங்கா, எங்கள் எல்லோருடைய மனதிலும் நீங்கா இடம்பிடித்திருக்கிறீர்கள் என்றார். இதற்கு பதிலளிக்கும் கமல், உங்கள் அனைவரின் அன்பிற்கும் நான் என்றென்றிற்கும் தலைவணங்கிறேன் என்கிறார்.

போட்டியாளர்களிடம் பேசும் கமலின் அருகே பெரிய கேக் ஒன்று வைக்கப்பட்டுள்ளது.அதில் பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கேக்கை பார்த்த பிரியங்கா மற்றும் போட்டியாளர்கள் ஒன்றாக இணைந்து பாடுகின்றனர். கேக்கை கொஞ்சம் உள்ளே அனுப்புங்க சார், சோறு இருந்தா கொஞ்சம் அனுப்புங்க சார், கொஞ்சம்ன்னா கொஞ்சம் இல்லைங்க சார், நாங்க மொத்தம் 16 பேர் என்று பாடலை பாடுகின்றனர். இதனால் மகிழ்ச்சியில் கமல் சிரிக்கும் ப்ரோமோதான் தற்போது வெளியாகியுள்ளது.

Related Posts

Leave a Comment