163
நேற்றய பிக் பாஸ் நிகழ்ச்சி
நேற்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கூல் சுரேஷ் வெளியேற்றப்பட்டார். இவருடைய எலிமினேஷன் ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட ஒன்று தான். ஏனென்றால் அவரே வீட்டை விட்டு வெளியே செல்லும் எண்ணத்தில் தான் இருந்தார்.
நேற்று ஒளிபரப்பான இந்த எபிசோடின் லைவ்வில் அர்ச்சனாவிற்கு மக்கள் மத்தியில் இருந்து நல்ல வரவேற்புடன் பலமான கைதட்டல்களும் கிடைத்தது.
ரசிகர்கள் கடும் அதிருப்தி
ஆனால், எடிட் செய்யப்பட்ட எபிசோடில் அந்த கைதட்டல்களை தூக்கிவிட்டதாக ரசிகர்கள் பதிவிட்டு வருகிறார்கள். இதனால் தங்களுக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
மேலும் விஜய் டிவி அர்ச்சனாவுக்கு எதிராக செயல்படுகிறதா அல்லது புல்லி கேங்கில் இருந்து யாரையாவது ஒருவரை சப்போர்ட் செய்கிறதா என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்த விஷயம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.