பிக்பாஸில் வைல்டு கார்ட் போட்டியாளராக நுழைந்திருக்கும் அமீர் யார் தெரியுமா?

by News Editor

பிக்பாஸ் 5 நிகழ்ச்சியின் இன்றைக்கான ப்ரோமோவில் கனா காணும் காலங்கள் என்ற பள்ளி பருவ நினைவுகளின் டாஸ்கை பிக்பாஸ் கொடுத்திருக்கிறது.

இதில், சிபி தலைமையில் அவர் கூறுவதை மற்ற மாணவர்கள் கேட்பது போல் டாஸ்கும் கொடுக்கப்பட்டிருக்கிறது.

இதனிடையே, முதல் ப்ரோமோ காட்சியிலேயே வைல்டு கார்ட் என்ட்ரியாக நடன இயக்குனர் அமீர் பங்கேற்று இருப்பது தெரியவந்தது.

அதன்பின்னர், யார் இவர் என ரசிகர்கள் குழம்பி வந்த நிலையில், அவர் விஜய் டிவியின், ஜோடி, டான்ஸ் Vs டான்ஸ், கிங்ஸ் ஆஃப் டான்ஸ் என்ற நடன நிகழ்ச்சிகளில், நடன இயக்குனராக பணியாற்றியவர் என்பது தெரியவந்துள்ளது.அதுமட்டுமின்றி இவர் பல்வேறு திரைப்படங்களையும், நடன இயக்குனராகவும் பணியாற்றி வந்துள்ளார். இதனிடையே, இவர் தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் இருப்பது ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Related Posts

Leave a Comment