தொடர்ந்து கட்டம் கட்டப்படும் பிரியங்கா.. தவறு செய்ததால் தண்டனை கொடுத்த சிபி..

by Column Editor

பிரியங்கா செய்த சேட்டைகளால், அவருக்கு சிபி தண்டனை கொடுக்கும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

இன்று காலையிலிருந்து வெளியான இரண்டு ப்ரோமோக்களும் பிரியங்காவை மையப்படுத்தியே ஒளிப்பரப்பப்பட்டு வருகிறது. அதன்படி முதல் இரண்டு ப்ரோமோவில் தாமரையுடன் மோதல் இருப்பதுபோல் காட்சிகள் காட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் மூன்றாவது ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. அந்த ப்ரோமோவிலும் சிபியுடன் பிரியங்கா மோதுவது போன்றும், அதனால் அவருக்கு தண்டனை வழங்கப்பட்டது போன்றும் காட்சிகள் உள்ளது.

அதில், கார்டன் ஏரியாவில் உள்ள ஒரு இடத்தில் பிரியங்கா படுத்துக்கொண்டு இருக்கிறார். அப்போது அங்கு வரும் வருண் என்ன ஆச்சு என கேட்க, மன்னிப்பு கடிதம் கேட்கிறார் சிபி என்று விஷயத்தை சொல்கிறார் பிரியங்கா. அதற்கு எழுதிக் கொடுத்தால் உள்ளே வந்து தூங்கலாம்ல என கேட்கிறார் வருண். அடுத்த காட்சியில் கடிதம் எழுதி கொடுத்துவிட்டு உள்ளே வருமாறு சொன்னேன். ஆனால் அவங்க கேட்க மாட்டறாங்க என்று சிபி பதிலளிக்கிறார்.

நான் மன்னிப்பு கடிதம் கொடுப்பதில் பிரச்சனை இல்லை. குச்சியை யூஸ் பண்ண மாட்டேன்னு முதல்ல சொல்ல சொல்லு என்று அபிஷேக்கிடம் பிரியங்கா சொல்கிறார். மீண்டும் கார்டன் ஏரியாவுக்கு வரும் வருண், சாரின்னு எழுதி கொடுக்குறதுல என்ன இருக்கு என்று பிரியங்காவிடம் கேட்கிறார். அதற்கு வாய்ப்பே இல்லை என்கிறார். ஆசிரியரான சிபி, பிரியங்காவுக்கு தண்டனை கொடுப்பதற்காக கைகளில் இரண்டு டீ கப்புகளை வைத்துக் கொண்டு நிற்கும்படி கூறுகிறார். அதற்கு தான் ஒன்றும் அவ்வளவு பெரிய தவறு செய்யவில்லை என்று கூறும் பிரியங்கா கையில் உள்ள டீ கப்பை அப்படியே கவிழ்த்து உடைக்கிறார். அடுத்தடுத்து பிரியங்கா இப்படி எந்த மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்று பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

Related Posts

Leave a Comment