தொடர்ந்து நேரடியாக ஓடிடி-யில் வெளியாகும் தனுஷின் மூன்று திரைப்படங்கள்.. ரசிகர்கள் அப்சட்..

by Column Editor

இந்தியளவில் பிரபலமான நட்சத்திரங்களில் ஒருவர் தனுஷ். இவருடைய நடிப்பில் தற்போது திருச்சிற்றம்பலம் படம் உருவாகி வருகிறது.

இப்படத்திற்கு முன் மாறன் மற்றும் அத்ராங்கி ரே மற்றும் ஹாலிவுட் திரைப்படமான ‘the grey man’ என மூன்று திரைப்படங்களை நடித்து முடித்திருந்தார் தனுஷ்.

தில் ஹாலிவுட்டில் தயாராகியுள்ள ‘the grey man’ திரைப்படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகவுள்ளது என படக்குழு அறிவித்துவிட்டனர்.

கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘மாறன்’ திரைப்படத்தின் பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தை ஓடிடி-யில் வெளியிட பேச்சு வார்த்தை நடந்து வருகிறது என்று தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் தற்போது பாலிவுட்டில் தனுஷ் நடித்துமுடித்துள்ள அத்ராங்கி ரே படமும் நேரடியாக ஹாட்ஸ்டார் ஓடிடி-யில் தான், வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

ஏற்கனவே தனுஷின் ஜகமே தந்திரம் திரைப்படம் நேரடியாக ஓடிடி-யில் வெளியாகி, அவரது ரசிகர்களை அப்சட் ஆக செய்தது. அதனை தொடர்ந்து, தற்போது அத்ராங்கி ரே படமும் நேரடியாக ஓடிடி-யில் வெளியாவது, தனுஷின் ரசிகர்கள் பலருக்கும் வருத்தத்தை அளித்துள்ளது.

Related Posts

Leave a Comment