கமலுக்கு பதிலாக பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது இந்த நடிகை தானாம் – லீக்கான தகவல்!

by News Editor

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியானது 50 நாட்களை கடந்துவிட்ட நிலையில், தற்போது காரசாரமாக செல்ல ஆரம்பித்துள்ளது. வாரம் இறுதியில், கமல் பங்கேற்று போட்டியாளர்களிடன் அந்த வார நிகழ்வுகளை கேட்டறிந்து குறைவான வாக்குகள் பெற்றவர்களின் பெயர்களை கூறி வழி அனுப்பி வைப்பார்.

இந்நிலையில், தற்போது கமலுக்கு திடீரென கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால், ட்விட்டர் பக்கத்தில் தான் பாதித்து இருப்பதை அறிவித்து இருந்தார். இவரின் பதிவுக்கு, அதிர்ச்சியடைந்த ரசிகர்கள் அப்போது இந்த வாரம் யார் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க போகிறார் என்ற கேள்வியையும் எழுப்பி வருகின்றனர்.

பிக்பாஸ் குழுவும் என்ன செய்வதென்று தெரியாமல் விழிபிதுங்கிய நிலையில், தற்போது லீக்கான தகவலின் படி கமலின் மகளான ஸ்ருதிஹாசன் இந்த வாரம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என கூறப்படுகிறது.

ஏற்கனவே கடந்த சீசன்களில், ஸ்ருதி ஹாசன் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்று வந்ததும் போட்டியாளர்களிடம் கேள்வி கேட்டதும் பார்த்திருப்போம்.

Related Posts

Leave a Comment