பிக் பாஸில் மீண்டும் அதிரடியாக என்றி கொடுக்கப்போகும் கமல்…!?

by Column Editor

பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த கமலஹாசனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் இந்த வாரம் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மாட்டார் என்ற தகவல் வெளியாகியிருந்தது.

அது மட்டும் இன்றி கமல் வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை எபிசோட்களை யார் தொகுத்து வழங்க போகிறார் என்ற கேள்வியும் எழுந்திருந்தது.

கமல் சிகிச்சை முடிந்து, வழக்கமான பணிகளுக்கு துவங்க இரண்டு முதல் மூன்று வாரங்கள் வரை ஆகலாம் என கூறப்படுகிறது.

அதுவரை பிக்பாஸ் நிகழ்ச்சியில் எவிக்ஷனை நிறுத்தி வைக்கலாமா என பிக்பாஸ் டீம் ஆலோசித்து வருவதாக கூறப்பட்டது.

ஆனால் தற்போது வெளியான தகவலின் படி கமலே பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து தொகுத்து வழங்க போவதாக கூறப்படுகிறது.

மருத்துவமனை அல்லது வீட்டில் இருந்து Virtual முறையில் கமல் தொகுத்து வழங்க போவதாக கூறப்படுகிறது. இதேவேளை, கமல் மற்றும் மருத்துவர்களிடம் இது குறித்து விஜய் டீவி ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறதாம். இதனால் பிக் பாஸ் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

மிக விரைவில் இது குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பினை பிக் பாஸ் டீம் அறிவிக்கும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

Related Posts

Leave a Comment