“எங்களுக்காக இதை மட்டும் செய்யாதீங்க“- நடிகர் அஜித்திற்கு ரசிகர்கள் வைக்கும் கோரிக்கை

by Column Editor

வலிமை மேக்கிங் வீடியோவை பார்த்த ரசிகர்கள், அஜித் குமாரிடம் கோரிக்கை ஒன்றை விடுத்திருக்கிறார்கள்.

நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்திருக்கும் படம் தான் ‘வலிமை’.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து, ஹிந்தி நடிகை ஹீமா குரேஷி, வில்லனாக நடிகர் கார்திக்கேயா, நகைச்சுவை கதாப்பாத்திரத்தில் யோகி பாபு உள்ளிட்டோர் நடித்திருக்கும் இந்த படம் 2022ம் ஆண்டு பொங்கல் பண்டிகை ஸ்பெஷலாக ரிலீஸாகவிருக்கிறது.

இந்நிலையில் படத்தில் வரும் பைக் ஸ்டண்ட் காட்சியின் மேக்கிங் வீடியோ நேற்று மாலை வெளியானது. வெளியான 17 மணி நேரத்தில் 4 மில்லியன் பார்வையாளர்களை தொட்டுள்ளது.

வீடியோவை பார்த்த அனைவரும் ஒரு நிமிடம் பதறிவிட்டார்கள் என்றே கூறலாம். வீடியோவில் அஜித் பைக்கில் இருந்து கீழே விழந்து பின்னர் மீண்டும் எழுந்தது தான் அதற்கு காரணம்.

பலரின் வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸில் வலிமை மேக்கிங் வீடியோவை பார்க்க முடிகிறது.இந்நிலையில் ரசிகர்கள் அஜித்திடம் ஒரு கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்.

அஜித் பல முறை விபத்தில் சிக்கி காயம் அடைந்து குணமாகியிருக்கிறார், அவருக்கு முதுகு பகுதியில் பிரச்சனை இருக்கிறது.

அப்படி இருக்கும்போது இப்படி ரிஸ்கான ஸ்டண்ட் காட்சிகளில் நடிப்பதை இனி தவிர்க்குமாறு ரசிகர்கள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

ஸ்டண்ட் காட்சிகளுக்கு டூப் போட்டுக்கொள்ளலாம் என்று இயக்குநர்கள் சொன்னாலும் அஜித் கேட்பது இல்லை. தானே நடிப்பதில் அவருக்கு ஒரு சந்தோஷம்.

Related Posts

Leave a Comment