சிவப்பு பட்டியலில் இருந்து அனைத்து நாடுகளையும் நீக்கியது பிரித்தானியா !

by Column Editor

கொரோனா தொற்றின் ஒமிக்ரோன் மறுபாட்டின் அச்சம் காரணமாக பிரித்தானியாவின் சிவப்பு பட்டியலில் இணைக்கப்பட்ட 11 நாடுகளை இன்று முதல் நீக்குவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

அங்கோலா, போட்ஸ்வானா, மொசாம்பிக், நமீபியா, நைஜீரியா, தென் ஆபிரிக்கா, சிம்பாப்வே ஆகிய 11 நாடுகள் கடந்த நவம்பர் மாதத்தில் சிவப்பு பட்டியல் இணைக்கப்பட்டன.

உலகம் முழுவதும் பரவிவரும் ஒமிக்ரோன் மறுபாடு தற்போது பிரித்தானியாவில் சமூகப் பரவலடைந்து வருவதாக பிரித்தானிய சுகாதார செயலாளர் சஜிட் ஜாவிட் நாடாளுமன்றில் தெரிவித்தார்.

மேலும் வெளிநாடுகளில் இருந்து ஒமிக்ரோன் மறுபாட்டின் ஊடுருவலை கட்டுப்படுத்த பயணத் தடை குறைவான செயற்திறனையே கொண்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.

வெளிநாட்டு பயணங்களுக்காக நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகள் தொடரும் அதேவேளை சிவப்பு பட்டியலில் இருந்து அனைத்து நாடுகளையும் நீக்குவதாகவும் சஜிட் ஜாவிட் கூறினார்.

Related Posts

Leave a Comment