எகிறும் தக்காளி விலை – ரூ.150க்கு மேல் விற்பனை!

by Column Editor

ஆந்திராவில் பெய்து வரும் கனமழையால் தமிழ்நாட்டிற்கு தக்காளி வரத்து குறைந்துள்ளது. இதனால் சென்னையில் தக்காளியின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.

கடந்த சில வாரங்களாக தமிழகம், ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது , இதன் காரணமாக சென்னை கோயம்பேடு சந்தைக்கு வரும் தக்காளியின் வரத்து குறைந்துள்ளது. தக்காளியின் வரத்து குறைந்துள்ளதால் அதன் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. உதாரணத்திற்கு கோயம்பேடு சந்தையில் ரூ.80க்கு தக்காளியின் விற்கப்பட்டால் சில்லரை வணிகத்தில் 110 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதேபோல் கோயம்பேட்டில் தக்காளி விலை கிலோ 110 க்கு விற்பனை செய்யப்பட்டால் சில்லறை வணிகத்தில் 130 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்நிலையில் சென்னையில் இன்று தக்காளி கிலோவுக்கு 150 க்கும் மேல் விற்பனை செய்யப்படுகிறது. கூட்டுறவு சங்கங்கள் சார்பில் நடத்தப்படும் திருவல்லிக்கேணி டியுசிஎஸ் போன்ற பண்ணைப் பசுமை கடைகளில் தக்காளியின் விலை 85 ரூபாய்க்கு விற்பனையாகிறது. தொடர் கனமழை மற்றும் வரத்து குறைவால் தக்காளி விலை மட்டுமின்றி மற்ற காய்கறிகளின் விலையும் உயர தொடங்கியுள்ளது. முருங்கைக்காய் கிலோ 90 ரூபாய்க்கும், புடலங்காய் 70 ரூபாய்க்கும், பாகற்காய் ,கத்தரிக்காய், சுரைக்காய் ஆகியவை 60 ரூபாய்க்கும், பீன்ஸ் ,அவரைக்காய் ,சாம்பார் வெங்காயம் ஆகியவை 50 ரூபாய்க்கும் ,கேரட் , பீட்ரூட் ,வெங்காயம் 40 ரூபாய்க்கும் ,உருளைக்கிழங்கு ரூ.30க்கும், முட்டைகோஸ் ரூ.20க்கும் விற்பனையாகிறது. மழை ஓய்ந்து பருவமழை முடிவுக்கு வந்தபிறகு , காய்கறி வரத்து அதிகரித்து அதன் விலை குறையும் என்று வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts

Leave a Comment