பிரபல நடிகர் மாரடைப்பால் திடீர் மரணம்: பேரதிர்ச்சியில் திரையுலகம்

by Column Editor

பிரபல நடிகரும் இயக்குனருமான ஆர். என். ஆர் மனோகர்(61) மாரடைப்பினால் இன்று காலமானார். இவரது மறைவிற்கு திரையுலக பிரபலங்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

பேண்டு மாஸ்டர் என்ற படத்தில் கே.எஸ்.ரவிகுமாரிடம் உதவியாளராக 1993ம் ஆண்டு பணியாற்றிய இவர், பின்பு கோலங்கள் படத்தில் வசனகர்த்தாவாக பணியாற்றினார்.

பின்பு விஜயகாந்த் நடித்த ‘தென்னவன்’ படத்துக்கும் வசனம் எழுதியதோடு, அப்படத்தில் விவேக்குடன் நடித்திருந்த ரவுடி கதாபாத்திரம் வரவேற்பைப் பெற்றது.

பின்பு நகுல், சுனைனா படத்தினை இயக்கிய இவர் சலீம், என்னை அறிந்தால், நானும் ரவுடிதான், வேதாளம், மிருதன், கைதி திரைப்படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் இன்று ஆர்.என்.ஆர்.மனோகர் சென்னையில் மாரடைப்பால் காலமானார். அவரது மறைவுக்குத் திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Related Posts

Leave a Comment