பொன்னியின் செல்வன் 2 ஏப்.28-ல் ரிலீஸ் …!

by Lifestyle Editor

‘பொன்னியின் செல்வன்’ படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28, 2023 அன்று வெளியாவதாக படக்குழு அறிவித்துள்ளது.

அமரர் கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ நாவலை, லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், மணிரத்னம் இயக்கத்தில் ‘பொன்னியின் செல்வன்’ எனும் பெயரில் இரண்டு பாகங்களைக் கொண்ட திரைப்படமாக தயாரித்திருக்கிறது. இதன் முதல் பாகம் கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதியன்று உலகம் முழுவதும் வெளியாகி, வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் சாதனையை படைத்தது.

இந்நிலையில் ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28, 2023 அன்று வெளியாவதாக படக்குழு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக நடிகர் விக்ரம் தனது டிவிட்டர் பக்கத்தில், படத்தின் புரோமோ ஒன்றை வெளியிட்டு, we are back என பதிவிட்டுள்ளார். முதல் பாகத்தில் நடித்த நடிகர்கள் கார்த்திக், ஜெயம் ரவி, விக்ரம், நடிகை ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்டோர் இரண்டாம் பாகத்திலும் நடித்திருப்பது விக்ரம் வெளியிட்டுள்ள புரோமோ வீடியோவின் மூலம் தெரியவந்துள்ளது.

Related Posts

Leave a Comment