நடிகை சுஹானி பட்னாகர் மரணம்..

by Lifestyle Editor

தங்கல் படத்தில், அமீர் கானின் மகளாக நடித்திருந்த, சுஹானி பட்னாகர் 19 வயதிலேயே மரணமடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாலிவுட் நடிகர் அமீர் கான் தயாரித்து, நடித்திருந்த திரைப்படம் ‘தங்கல்’. மல்யுத்த வீராங்கனைகளின் உண்மை கதையை தழுவி எடுக்கப்பட்ட இந்த படத்தை, நிதீஷ் திவாரி இயக்கி இருந்தார். இந்த படத்தில் இளம் வயது பபிதாவாக நடித்து பிரபலமானார் சுஹானி பட்னாகர்.

தற்போது 19 வயதே ஆகும் சுஹானி பட்னாகர், இன்று டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவருக்கு சில வருடத்திற்கு முன்பு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதற்காக சிகிச்சை எடுத்து வந்த போது, அதற்காக அவர் எடுத்து கொண்ட மருத்துகள் இவருக்கு தொடர்ந்து பக்க விளைவுகளை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக அவரது உடலில் நீர் சேர துவங்கியது. எனவே உடலில் சேர்ந்த திரவத்தை வெளியேற்ற எய்ம்ஸ் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்துள்ளார். சிகிச்சையில் இருக்கும் போதே… இவருடைய உடல்நிலை மிகவும் மோசமாகி கொண்டே சென்ற நிலையில், சுஹானி மரணமடைந்தார்.

19 வயதே ஆன இளம் நடிகை மரணமடைந்துள்ளது, பாலிவுட் திரையுலகை சேர்ந்த ரசிகர்களையும், பிரபலங்களையும் உச்சகட்ட அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் சுஹானியின் இறுதி சடைந்து நாளை நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.

Related Posts

Leave a Comment