இயக்குனர் அவதாரம் எடுத்துள்ள பிக்பாஸ் புகழ் அமீர் ..

by Lifestyle Editor

விஜய்யில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் தான் அமீர்.

இவருக்கும் பாவ்னிக்கு நிகழ்ச்சியில் இருக்கும் போது காதல் ஏற்பட இருவரும் நாங்கள் காதலிக்கிறோம் என அதிகாரப்பூர்வமாக தெரிவித்துவிட்டனர்.

பின் திருமணம் எப்போது என கேட்கும் போது இருவருக்கும் வாழ்க்கையில் செய்ய சில முக்கிய விஷயங்கள் உள்ளது, அதை முடித்துவிட்டு திருமணம் செய்துகொள்வோம் என தெரிவித்திருக்கின்றனர்.

தற்போது அமீர் புதிய படம் ஒன்றை இயக்க முடிவு செய்துள்ளாராம். முதன்முறையாக படம் இயக்கும் புதிய படத்தில் இவர் நாயகனாக நடிக்க பாவ்னி நாயகியாக நடிக்கிறாராம்.

இப்படத்திற்கான மற்ற தொழில்நுட்ப கலைஞர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் அதிகாரப்பூர்வ தகவல் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Related Posts

Leave a Comment