மறைந்த நடிகர் விஜயகாந்த் நினைவிடத்திற்கு கிடைத்த உலக சாதனை விருது- என்ன விஷயம்

by Editor News

தமிழ் சினிமாவில் 80களில் மிகவும் முக்கியமான நடிகராக வலம் வந்தவர் நடிகர் விஜயகாந்த்.

கேப்டன் என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் இவர் சுமார் 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். பெரும்பாலும் போலீஸ் கதாபாத்திரங்களில் நடித்துள்ள இவர் அதில் கச்சிதமாக காணப்படுவார்.

மற்ற மொழிகளில் படங்கள் நடிக்காத நடிகர் என்ற பெருமை இவருக்கு மட்டுமே உள்ளது. உடல்நலக் குறைவால் வீட்டிலேயே முடங்கிய இவர் கடந்த வருடம் (2023) டிசம்பர் மாதம் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.

விஜயகாந்தின் உடல் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி தலைமை அலுவலகத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

விஜயகாந்த் நினைவிடத்திற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர், அங்கு அன்னதானமும் வழங்கப்பட்டு வருகிறது.

அவரது நினைவிடத்தில் 125 நாட்களில் தமிழ்நாடு முழுவதும் இருந்து 15 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அஞ்சலி செலுத்தி உள்ளனர்.

இந்த நிலையில் விஜயகாந்த் நினைவிடத்திற்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் சார்பில் உலக சாதனை விருது வழங்கப்பட்டுள்ளது.

பார்வையாளர்களுக்கு உணவு வழங்கும் உலகின் முதல் நினைவுச்சின்னமாக விஜயகாந்தின் நினைவுச்சின்னம் போற்றப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது,

Related Posts

Leave a Comment