விஷமாகும் மாறும் ஐஸ் கிரீம்… ஒரே ஒரு எலுமிச்சையால் அம்பலமாகும் உண்மை

by Editor News

பொதுவாக ஐஸ்கிரீமிற்கு தனி இடம் உண்டு. ஆம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

தமிழில் பனிக்கூழ் என்று அழைக்கப்படும் இதில் கலப்படமும் காணப்படுகின்றது. இவை ஆரோக்கியத்தை கெடுக்கும் விஷத்தை போன்றது என்பதை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஐஸ்கிரீமில் பிடோமைன் (Ptomaine) மற்றும் டைரோடாக்ஸிகான் (Tyrotoxicon) போன்ற இரசாயனங்களால் கலப்படம் செய்யப்படலாம் என மேலே குறிப்பிட்ட உணவு தர நிர்ணய அமைப்புகள் கூறுகின்றன.

ஐஸ்கிரீமில் கலப்படம் :

ஐஸ்கிரீமை கெட்டியாகவும் இனிப்பாகவும் இருக்க கார்ன் சிரப், பிரக்டோஸ் கார்ன் சிரப் மற்றும் குளுக்கோஸ் சிரப் கலக்கப்படுகின்றது.

ஐஸ்கிரீம் கொழுப்பாகவும், நுரையாகவும் இருப்பதற்கு சோப்பு அல்லது சலவை பவுடர் கலக்கப்படலாம். இதனை கண்டுபிடிக்க சிறிது எலுமிச்சை சாறு சிறிதளது ஐஸ்கிரீமில் சேர்த்தால், ஐஸ்கிரீமில் குமிழிகள் மற்றும் நுரை ஏற்படும் இதனை வைத்து தெரிந்து கொள்ளலாம்.

ஐஸ்கிரீமின் அளவை அதிகரிக்க, கிரீம் அமைப்பைக் கொடுக்க தாவர எண்ணெய் மற்றும் டால்டா இவற்றினை சேர்க்கலாம்.

ஐஸ்கிரீம் நீண்ட நேரம் உருகாமல் இருக்கவும், நீண்ட நாள் கெட்டுப் போகாமல் இருக்கவும், ஆரோக்கியமற்ற கம் போன்ற பொருட்களை ஐஸ்கிரீமில் சேர்க்கலாம்.

FSSAI பரிந்துரைத்துள்ள செயல்முறை :

1. ஒரு ஸ்பூன் ஐஸ்கிரீம் எடுத்து அதில் சிறிது வெந்நீர் சேர்க்கவும்.

2. இப்போது அதில் 3 முதல் 4 சொட்டு HCL (ஹைட்ரோகுளோரிக் அமிலம்) சேர்க்கவும்.

3. இப்போது ஐஸ்கிரீமின் நிறம் மாறத் தொடங்கும். அது சிவப்பு அல்லது இளஞ்சிவப்பு நிறமாக மாறினால், அது கலப்படம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

Related Posts

Leave a Comment