பிபின் ராவத் வீட்டிற்கு சென்ற மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர்..!

by Column Editor

நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் வெல்லிங்ஸ்டன் இராணுவ பயிற்சிப்பள்ளிக்கு, முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உட்பட 9 இராணுவ உயர் அதிகாரிகள் இன்று ஹெலிகாப்டரில் செல்லவிருந்தனர். காலை 10.30 மணியளவில் சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டு சென்ற நிலையில், வானிலை மற்றும் பனிமூட்டம் காரணமாக ஹெலிகாப்டர் திரும்பி அனுப்பப்பட்டுள்ளது.

வரும் வழியில் ஏற்பட்ட விபத்தில், இராணுவ ஹெலிகாப்டர் மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கியுள்ளது. இந்த விபத்து குறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், 11 பேர் உயிரிழந்துள்ளதாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

இந்நிலையில், டெல்லியில் உள்ள முப்படைகளின் தளபதி பிபின் ராவத்தின் வீட்டிற்கு சென்ற மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பிபின் ராவத் குடும்பத்தினருடன் பேசியுள்ளார். விபத்து மற்றும் மீட்பு பணிகள் குறித்து குடும்பத்தினரிடம் விளக்கம் அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

Related Posts

Leave a Comment