யாழ்ப்பாணத்தில் வியக்க வைக்கும் வகையில் நடைபெற்ற ஆயுத பூஜை நிகழ்வு

by Lankan Editor

யாழ்ப்பாணம் – கோண்டாவில் பகுதியில் உள்ள குருக்கள் ஒருவரது இல்லத்தில் நேற்றிரவு ஆயுத பூஜையானது முற்றிலும் இந்திய முறைப்படி கோலாகலமாக அனுஷ்டிக்கப்பட்டது.

ஏழு படிகளில் கொலு வைத்து, நாதஸ்வர இசையுடன் பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன. இறுதியில் சுமங்கலிகளுக்கு மஞ்சள், குங்குமம் மற்றும் கூறை என்பன வழங்கப்பட்டன. அத்துடன் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன. பின்னர் பூஜைகளை நடாத்திய குருக்கள் கௌரவிக்கப்பட்டதுடன், பிரசாதம் வழங்கலுடன் நிகழ்வு நிறைவுக்கு வந்தது.

இந்த இல்லத்தில் நடைபெற்ற ஆயுத பூஜையானது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

Related Posts

Leave a Comment