தொற்றுப் பரவல் பாதிப்புக்கு பிறகு வாடகை கார் ஒட்டுநர்கள் பற்றாக்குறை!

by Column Editor

உரிமம் பெற்ற வாடகை கார் ஓட்டுநர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள், தொற்றுநோய்க்குப் பிறகு பணிக்கு திரும்பவில்லை என தொழில்துறையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்பு தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னர் 300,000 என்ற பலம் வாய்ந்த பணியாளர்கள் படையில், தற்போது 160,000பேர் குறைவாக உள்ளதாக உரிமம் பெற்ற தனியார் கார் வாடகை சங்கம் மதிப்பிட்டுள்ளது.

இந்த பற்றாக்குறையால் பெண்கள், மாணவர்கள் மற்றும் இரவு நேர பணியாளர்கள் வீட்டிற்கு செல்ல போராடி வருபவர்களின் பாதுகாப்பு குறித்த கவலை எழுந்துள்ளது.

முடக்கநிலையின் போது, மக்களின் தேவை சரிந்ததால் பல ஓட்டுநர்கள் தொழிலை விட்டு வெளியேறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாகனங்களின் விலையுயர்ந்த உரிமம் மற்றும் பதிவு செய்வதில் உள்ள பின்னடைவு, அத்துடன் ஓட்டுநர்களுக்கான குற்றவியல் மற்றும் மருத்துவ சோதனைகள் என்பனவும் ஓட்டுநர்கள் பணிக்கு திரும்புவதற்கு தடையாக இருப்பதாக உரிமம் பெற்ற தனியார் கார் வாடகை சங்கம் கூறுகின்றது.

ஒரு வாடகை கார் ஓட்டுநர் உரிமத்திற்காக அவர்களின் உள்ளூர் சபைக்கு விண்ணப்பிக்க வேண்டும். இதனால் ஒரு வருடத்திற்கு 600 பவுண்டுகள் வரை செலவாகும். ஓட்டுநர்கள் ஒரு குற்றவியல் பதிவு மற்றும் முழு மருத்துவ பரிசோதனையையும் பெற வேண்டும். அத்துடன் சில சந்தர்ப்பங்களில் பிரபலமான அறிவு பரிசோதனையையும் பெற வேண்டும்.

Related Posts

Leave a Comment