உயர்நீதிமன்றம் அதிரடி – திருமணம் செய்யாமல் வாழ்ந்தால் இந்த உரிமை இல்லை

by Column Editor

திருமணம் செய்யாமல் ஒன்றாக வாழ்ந்தவர்கள், குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்குத் தொடர எந்த சட்டப்பூர்வ உரிமையும் கிடையாது என்று சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.

ஜோசப் பேபி என்பவருடன் சேர்த்து வைக்கக் கோரி கலைச்செல்வி என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன்,

திருமணம் செய்யாமல், ஒன்றாக சேர்ந்து வாழ்ந்தவர்கள், குடும்பநல நீதிமன்றத்தில் வழக்குத் தொடர சட்டப்பூர்வ உரிமையற்றவர்கள் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், பணப் பரிவர்த்தனை தொடர்பான முன்விரோதத்தால் இந்த வழக்குத் தொடரப்பட்டுள்ளதாகக் கூறி மனுவை தள்ளுபடி செய்வதாக நீதிபதி வைத்தியநாதன் கூறியுள்ளார்.

Related Posts

Leave a Comment