முதன்முறையாக வீடியோ வெளியிட்ட ரோஷினி -பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து திடீரென வெளியேறியது ஏன்?

by Column Editor

பாரதி கண்ணம்மா இந்த பெயர் தமிழ் மக்களிடம் நன்கு பிரபலமாகிவிட்டது. ஒன்றும் புதிய பெயர் இல்லை இருந்தாலும் சீரியல் அப்பெயரில் வந்ததும் மக்கள் ரசிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

விஜய்யில் ஹிட்டாக ஓடும் ஒரு சீரியல் இது, இதன் மூலம் அதில் நடிக்கும் கலைஞர்கள் அனைவருமே மக்களிடம் பெரிய அங்கீகாரம் பெற்றுவிட்டார்கள். மாடலிங் துறையில் கலக்கி வந்த ரோஷினிக்கு இந்த சீரியல் பெரிய வரவேற்பை கொடுத்துள்ளது.

தொடர்ந்து நடிப்பார் என்று பார்த்தால் திடீரென சீரியலில் இருந்து வெளியேறிவிட்டார், காரணம் என்ன என்பது இதுவரை தெரியவில்லை. கண்ணம்மாவாக சீரியலில் வினுஷா என்பவர் நடிக்க தொடங்கிவிட்டார், ஒளிபரப்பாகிவிட்டது.

இந்த நிலையில் தான் ரோஷினி தனது இன்ஸ்டா பக்கத்தில், சில காரணங்களால் சீரியலில் என்னால் தொடர முடியவில்லை, உங்கள் ஆதரவுக்கு நன்றி.

இனியும் வருங்காலத்தில் உங்களது ஆதரவு கிடைக்கும் என நம்புவதாக அவர் வீடியோ வெளியிட்டுள்ளார்.

Related Posts

Leave a Comment