207
விஜய் தொலைக்காட்சியின் ஹிட் சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியல் இத்தனை நாள் ஓட காரணமே அதில் வில்லியாக நடிக்கும் வெண்பாவால் தான்.
அவர் செய்த சூழ்ச்சியால் கதை இவ்வளவு தூரம் நகர்ந்து வருகிறது, இப்போது கண்ணம்மா வேடம் மாற்றப்பட்டு விறுவிறுப்பின் உச்சமாக சீரியல் ஓடிக் கொண்டிருக்கிறது.
வில்லியாக நடித்துவந்த பரீனா நிஜத்தில் கர்ப்பமாக இருந்தார், அந்த நேரத்திலும் ஓய்வு எடுக்காமல் நடித்து வந்தார், சில ரசிகர்கள் இந்த நேரத்தில் வீட்டில் இருக்கலாமே என்றெல்லாம் கூட கமெண்ட் செய்து வந்தனர்.
பரீனாவின் ரசிகர்கள் கடந்த சில வாரங்களாக அவருக்கு எப்போது குழந்தை பிறக்கும் என காத்துக் கொண்டு இருந்தனர்.
இந்த நிலையில் நடிகை பரீனாவிற்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாம், இதனை அவரே தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.