விக்ரம் படத்தில் எடுக்கப்படவுள்ள முக்கிய காட்சி, மூவரும் இணையவுள்ளார்களா !

by Column Editor

மாநகரம், கைதி ஆகிய இரண்டு ஹிட் படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

அடுத்த படமே தளபதியுடன் கைகோர்த்து மாஸ்டர் எனும் மற்றோரு ஹிட் படத்தை இயக்கியிருந்தார். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக உலகநாயகனை வைத்து விக்ரம் என்னும் படத்தை இயக்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ்.

கடந்த நவம்பர் 7-ந் தேதி கமலின் பிறந்தநாளன்று விக்ரம் படத்தின் glance-ஐ வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை மேலும் மிகுதியாக்கியுள்ளார் இயக்குனர்.

படத்தின் முதல்கட்ட படப்பிடிப்புகள் ஏற்கனவே முடிவடைந்துள்ள நிலையில் தற்போது படப்பிடிப்பு குறித்து சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு கோயம்புத்தூரில் வருகிற 17-ந் தேதி முதல் தொடப்படவுள்ளதாக கூறப்படுகிறது. இதில் கமல், விஜய் சேதுபதி, பகத் பாசில் இணைந்து நடிக்கும் காட்சிகள் எடுக்கப்படவுள்ளதாக தகவல் வெளியகையுள்ளது.

எனினும் இதுகுறித்த அதிகாராப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Comment