நடிகர் விக்ரம் பிறந்தநாள் இன்று …

by Lifestyle Editor

சீயானுக்கு இன்று 57-வது பிறந்தநாள் ..

நடிகர் விக்ரமின் உண்மையான பெயர் கென்னடி. அவரது பெற்றோர் அவரை செல்லமாக கென்னி என்றுதான் அழைப்பார்கள். ஆனால் விக்ரமுக்கு அந்தப் பெயர் மீது ஈர்ப்பு இல்லாததால் சினிமாவுக்கு வந்தவுடன் தன் பெயரை விக்ரம் என மாற்றிக் கொண்டார்.

நடிகர் விக்ரமுக்கு கடந்த 1980 ஆம் ஆண்டு கேரளாவை சேர்ந்த சைலஜா என்பவர் உடன் திருமணம் நடைபெற்றது. இவர்கள் இருவரும் காதல் திருமணம் செய்துகொண்டனர்.

நடிகர் விக்ரம் நடிப்பதோடு மட்டுமல்லாமல் டப்பிங் கலைஞராகவும் சிறந்து விளங்கினார். குறிப்பாக ஷங்கர் இயக்கிய காதலன் படத்தில் பிரபுதேவாவுக்கு டப்பிங் பேசியதும் விக்ரம் தான் .

நடிகர் பிரசாந்த்தும், விக்ரமும் நெருங்கிய உறவினர்கள். பிரசாந்தின் தந்தை தியாகராஜன் நடிகர் விக்ரமின் தாய் மாமா ஆவார். குடும்பப் பிரச்சனை காரணமாக அவர்கள் பேசிக் கொள்வதில்லை.

Related Posts

Leave a Comment