நீங்கள் பிக்பாஸ் சென்றால் கண்டிப்பாக எனது 50 ஓட்டும் உங்களுக்கு தான்- விஜய்யே கொடுத்த சப்போர்ட்

by Column Editor

விஜய்யின் பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு வேகமாக எந்த ஒரு பரபரப்பும் இல்லாமல் அமைதியாக நடந்து வருகிறது. படப்பிடிப்பு முடித்த பிரபலங்கள் அவ்வப்போது ரசிகர்களுக்கு அப்டேட் கொடுத்து வருகிறார்கள்.

பீஸ்ட் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துவரும் காயத்ரி ஷான் படம் குறித்து ஒரு பேட்டியில் பேசியுள்ளார். அப்போது விஜய் பிக்பாஸ் குறித்து சொன்ன விஷயத்தையும் கூறியிருக்கிறார்.

அதில் அவர் கூறியதாவது, இந்த படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே பிக்பாஸ் வாய்ப்பு வந்தது, அந்த தகவலும் படக்குழு அனைவருக்கும் தெரிய வந்தது.விஜய்யும் அதை கேள்விப்பட்டு என்னிடம், கமல்ஹாசன் சார் நிகழ்ச்சி தானே, போறீங்களா ஓகேவா, நான் நிகழ்ச்சி அவ்வளவாக பார்ப்பது இல்லை.

நீங்கள் செல்கிறீர்கள் என்றால் கண்டிப்பாக நான் பார்ப்பேன், எனது 50 ஓட்டும் உங்களுக்கு தான் என்று கூறினார்.

அதைக்கேட்டதும் எனக்கு சந்தோஷமாக இருந்தது, பின் அடுத்தநாள் வந்த உடனே என்ன முடிவு செய்தீர்கள் என்று கேட்டார். நான் செல்லவில்லை என்று கூறியதும், சரி ஓகே என விஜய் சென்றுவிட்டதாக நடிகை பேட்டி கொடுத்துள்ளார்.

Related Posts

Leave a Comment