மீண்டும் ரோஜா சீரியலில் நடிக்க வந்த பிரபல நடிகை

by Column Editor

சன் தொலைக்காட்சியின் ஹிட் சீரியலாக ஓடிக் கொண்டிருக்கிறது ரோஜா. இந்த சீரியல் தான் கடந்த வருடங்களாக ஒரு சில வாரங்களை தவிர தமிழ்நாட்டில் TRPயில் முதல் இடத்தில் இருந்து வந்தது,

எனவே இந்த சீரியல் குழுவினர் கதையை மிகவும் பார்த்து பார்த்து அமைத்து வருகிறார்கள், கதையாசிரியர்களையும் இடையில் மாற்றினார்கள்.

இப்போது மீண்டும் ரோஜா சீரியல் கதை சூடு பிடிக்க டாப்பில் இருந்து வருகிறது. இந்த நேரத்தில் தான் சீரியலில் நடித்துவந்த சிலருக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டுள்ளது.அதில் ஒருவர் தான் தொகுப்பாளினி அக்ஷயா, இவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தற்போது குணமடைந்து வருவதாகவும் இன்ஸ்டாவில் பதிவு செய்திருந்தார்.

தற்போது அவர் பூரணமாக குணமாகி ரோஜா சீரியலில் மறுபடியும் நடிக்க வந்துள்ளார். லேட்டஸ்ட்டாக அவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அனு ஈஸ் பேக் என கொண்டாடி வருகிறார்கள்.

Related Posts

Leave a Comment