சக்திக்கு கெடு வைத்த வெற்றி … மீனாட்சி பொண்ணுங்க

by Lifestyle Editor

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் மீனாட்சி பொண்ணுங்க. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மார்க்கெட்டில் ஷக்தியின் கர்ப்பத்தை பற்றி சங்கிலி தவறாக பேச, வெற்றி அவனை அடிக்கிறான். அதற்கு புஷ்பா, ‘ஊரே இதைப் பத்தி பேசும் போது அவங்களை எல்லாம் நீ அடிப்பியா’ என கேட்க வெற்றி கோபத்தோடு வீட்டுக்கு வருகிறான்.

வீட்டுக்கு வந்த வெற்றி கோபமாக இருக்க சரண்யா என்ன நடந்தது என கேட்க எதுவும் சொல்லாமல் இருக்கிறான். பிறகு சக்தி எங்கே என கேட்க அவங்க வீட்டுக்கு போய் இருக்காங்க என்று சரண்யா சொல்ல வெற்றி கோபமாக சக்தியை பார்க்க வீட்டுக்கு கிளம்புகிறான்.

மீனாட்சி வீட்டில் யமுனா, சக்தி, துர்கா என மூவரும் பேசிக் கொண்டிருக்கும் போது அங்கு வரும் வெற்றி மார்க்கெட்டில் நடந்த அவமானங்களைப் பற்றி பேசி உனக்கு நாளைக்கு காலையில் 11:00 மணி வரைக்கும் தான் டைம், நான் ஒரு குறிப்பிட்ட இடத்தில் காத்துக் கொண்டிருப்பேன். நீ அங்கு வந்து எல்லா உண்மைகளையும் சொல்ல வேண்டும் இல்லை என்றால் இனி நமக்குள் எதுவும் கிடையாது என சொல்லி அங்கிருந்து நகர்கிறான்.

இதனால் யமுனாவும் துர்காவும் சக்தியிடம் இது ரொம்ப தப்பா போயிட்டு இருக்கு, வெற்றியிடம் ஒரு சத்தியத்தை வாங்கிக் கொண்டு உண்மையை சொல்லிவிடு என சொல்ல சக்தியும் வெற்றியிடம் உண்மையை சொல்லிவிடலாம் என முடிவெடுக்கிறாள்.

இதைத்தொடர்ந்து மறுநாள் காலையில் சக்தி வெற்றியைப் பார்த்து உண்மைகளை சொல்வதற்காக கிளம்பிக் கொண்டிருக்க திடீரென சரண்யாவிடம் இருந்து போன் வருகிறது. அசோக்கிற்கு இரண்டாவது கல்யாணம் என தகவல் வந்தது. நீ உடனே கிளம்பி வா நாம அங்க போகலாம் என சொல்ல இருவரும் கல்யாணம் நடக்கும் இடத்தில் கிளம்பி வருகின்றனர்.

அங்கே அசோக் மணக்கோலத்தில் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகின்றனர். சக்தி சரண்யாவுக்காக நியாயம் கேட்க உன்னுடைய புருஷனுக்கு இரண்டாவது கல்யாணம் நடக்கப்போகுது, அதை நிறுத்த உன்னால முடியல, நீ எதுக்கு என் பையன் கல்யாணத்தை நிறுத்த வந்திருக்க என அசோக்கின் அம்மா கேள்வி கேட்க பதில் சொல்ல முடியாமல் பரிதவிக்கிறாள் சக்தி.

இருந்தாலும் சக்தி தயவு செய்து இந்த கல்யாணம் வேண்டாம் நான் ரங்கநாயகியிடம் பேசுகிறேன் என கெஞ்சுகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப்போவது என்ன என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

Related Posts

Leave a Comment