தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 உயர்வு …

by Lifestyle Editor
0 comment

தமிழகத்தில் கடந்த சில நாட்களாவே தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. அக்‌ஷய திருதியையொட்டி சவரனுக்கு ரூ. 400 வரை குறைந்திருந்த தங்கம் விலை, மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. அதன்படி நேற்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.80 உயர்ந்து சவரன் ரூ.44,920-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதேநேரம் வெள்ளி விலை 40 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.80-க்கு விற்பனையானது.

இந்த நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை இரண்டும் ஏற்றம் கண்டிருக்கிறது. அதன்படி, சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு 120 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் 45 ஆயிரத்து 40 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதேபோல் கிராமுக்கு ரூ.15 அதிகரித்து ஒரு கிராம் ரூ.5,630க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலையும் கிராமுக்கு 40 காசுகள் அதிகரித்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.80.40க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.88,400க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Related Posts

Leave a Comment