குணசேகரனை தவிடுபொடியாக்கிய கதிர்! எதிர்பாராத டுவிஸ்ட்

by Lifestyle Editor

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் பல திருப்பங்கள் அரங்கேறி வருகின்றது.

பெண்களின் அடிமைதனத்தை மையமாக எடுக்கப்பட்டுள்ள இந்த சீரியல் பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் அவதானித்து வருகின்றனர்.

குறித்த சீரியல் பரபரப்பாக சென்று கொண்டிருந்த நிலையில், கடந்த சில மாதத்திற்கு முன்பு சீரியலின் நாயகனான குணசேகரன் திடீர் மாரடைப்பினால் உயிரிழந்த அவருக்கு பதில் நடிகர் வேல ராமமூர்த்தி நடித்து வருகின்றார்.

நீண்ட நாட்களாக சுவாரசியமில்லாமல் சென்ற சீரியலை தற்போது கதிர் டிஆர்பி- எகிற வைத்துள்ளார். கதிர் மட்டுமின்றி ஞானம் இருவரும் அண்ணனுக்கு எதிராக மாறியுள்ளனர்.

ஜீவானந்தத்தின் நிலை என்ன என்பதும் தெரியாமல் உள்ளதால் அவரது மகள் வெண்பாவை ஈஸ்வரி வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.

இந்நிலையில் தர்ஷினி குணசேகரன் பக்கம் சாய்ந்துள்ள நிலையில், இதற்கான காரணம் எதுவும் தெரியவில்லை.

இதுவரை கொமடியாக இருந்து வந்த கரிகாலன் தற்போது வில்லனாக மாறியுள்ளார். தற்போது சித்தார்த் கதிரிடமிருந்து எஸ்கேப் ஆகிய நிலையில், மீண்டும் கதிரிடமே சிக்கியுள்ளார்.

இது குணசேகரனுக்கு பெரிய தோல்வியாகவே இருக்கின்றது. அடுத்து சித்தார்த்திற்கும், ஜனனி தங்கைக்கும் எவ்வாறு திருமணம் நடக்கும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Related Posts

Leave a Comment